Map Graph

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி

இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று ஆகும். இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் என்ற இடத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள துவக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக இது இயங்குகிறது.

Read article
படிமம்:KGMC_-faculty-block.JPG